அதர்வாவுடன் நடித்தது குட் எக்ஸ்பீரியன்ஸ்! -கயல் ஆனந்தி

Bookmark and Share

அதர்வாவுடன் நடித்தது குட் எக்ஸ்பீரியன்ஸ்! -கயல் ஆனந்தி

பிரபுசாலமனின் கயல் படத்தில் நடித்தவர் ஆனந்தி. அந்த படத்தில் வெளிப்பட்ட அவரது நல்ல நடிப்பு இப்போது அவருக்கு பல படங்களை பெற்றுக்கொடுத்திருக்கிறது. அந்த வகையில், இதற்கு முன்பு சந்திரன், கல்யாண் ஆகிய ஹீரோக்களுடன் நடித்தவர் மூன்றாவதாக அதர்வாவுடன் சண்டிவீரன் படத்துக்காக நடித்துள்ளார்.

இதையடுத்து விசாரணை படத்தில் தினேசுடனும், த்ரிஷா இல்லேன்னா நயன்தாராவில் ஜி.வி.பிரகாசுடனும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சண்டிவீரன் படத்தில் நடித்து பற்றி ஆனந்தி கூறுகையில்,  நான் வியப்புடன் பார்க்கும் டைரக்டர் பாலா தயாரிக்கும் படத்தில் நடிப்பது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த படத்துல கிராமத்து கதை என்றதும் எனக்கு இன்னொரு பெரிய உற்சாகம்.

காரணம் பாவாடை தாவணி காஸ்டியூம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மேலும், இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே சற்குணம் சார் என்னை என்கரேஜ் பண்ணிக்கொண்டேயிருந்தார். மேக்கப், காஸ்டியூம் மட்டுமின்றி தஞ்சாவூர் தமிழில் பேசுவது என ஒவ்வொன்றையும் நேர்த்தியாக கற்றுக்கொடுத்தார்.

அதர்வா ஒரு நல்ல நடிகர். அவருடன் நடித்தது குட் எக்ஸ்பீரியன்ஸ். கேமராவுக்கு முன்னாடி நடிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் ஜாலியாக கிண்டல் செய்து கொண்டேயிருந்தார். அதனால் படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சமும் போரடிக்கவில்லை.

மேலும், அவுட்டோரில் இருந்த நாட்களில் யூனிட்டில் உள்ள அனைவருமே என்னை தங்களது குழந்தை போலவே கவனித்துக்கொண்டனர் என்கிறார் ஆனந்தி.

 


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்
கலையரசன் ஜோடியான ‘கயல்’ ஆனந்தி!
முன்பே தெரிந்திருந்தால் ஆபாச படத்தில் நடித்திருக்க மாட்டேன் : ஆனந்தி வருத்தம்
தொகுப்பாளி அஞ்சனாவை மணக்கிறார் 'கயல்' சந்திரன்
கவர்ச்சி எனக்கு செட்டாகாது என்கிறார் கயல் ஆனந்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions