முன்பே தெரிந்திருந்தால் ஆபாச படத்தில் நடித்திருக்க மாட்டேன் : ஆனந்தி வருத்தம்

Bookmark and Share

முன்பே தெரிந்திருந்தால் ஆபாச படத்தில் நடித்திருக்க மாட்டேன் : ஆனந்தி வருத்தம்

‘கயல்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

இப்படம் ஏ சான்றிதழ் பெற்ற படம். இப்படம் வெளியாகி சில எதிர்மறையான கருத்தைகளை பெற்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது.

சமீபத்தில் இப்படத்தில் நடித்தது குறித்து ஆனந்தி கூறும்போது, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கதை சொன்னபோது ஒரு அழகிய இளம்பருவ காதல் கதையாக இருந்தது.

கிளைமாக்ஸ் சீனை படமாக்கியபோதுதான் அதுவொரு அடல்ட் காமெடி படம் என்பது தெரிந்தது. அதுவரை அப்படிப்பட்ட படம் என்று எனக்கு தெரியாது. ஷூட்டிங்கிற்கு முன்புவரை, துணிச்சலான பெண் கதாபாத்திரம் என்றுதான் எனக்கு தெரிந்த விவரம். ஏற்கனவே நடித்த படங்களிலிருந்து இது வித்தியாசமானது என்று எண்ணினேன்.

முதலிலேயே இதுவொரு அடல்ட் படம் என்று தெரிந்திருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன். எனக்கு அடல்ட் காமெடி படங்கள் பிடிக்காது. மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க மாட்டேன்’ என்றார்.

ஆனந்தி தற்போது ‘பண்டிகை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபு சாலமன் தயாரிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions