மீண்டும் இணையும் கயல் ஜோடி

Bookmark and Share

மீண்டும் இணையும் கயல் ஜோடி

பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமான ஜோடி- சந்திரன், ஆனந்தி. அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் இருவருக்குமே பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஆனந்தி நம்பர் ஒன் நடிகையாக உயரத்தைத் தொடுவார் என கணிக்கப்பட்டது.

அதற்கு மாறாக ஆனந்திக்கு புதிய பட வாய்ப்புகள் குவியவில்லை. இந்நிலையில் ஆனந்தியும் சந்திரனும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். 'ஃபைசல்' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை 'சாட்டை' படத்தை இயக்கிய அன்பழகன் இயக்குகிறார்.

 இப்படத்தை பிரபு சாலமன் தயாரிக்க, அவரது ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்!  சத்தமில்லாமல் தொடங்கப்பட்டு, முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் முதல் வாரம் துவங்கவிருக்கிறது.

 தன் முதல்படமான 'சாட்டை' படத்தில் கல்வியை கருவாக வைத்து இயக்கினார் அன்பழகன்.  'ஃபைசல்' படத்திலும் சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை சொல்ல இருக்கிறாராம்.

 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions