மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!

Bookmark and Share

மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!

கயல் சந்திரன் தற்போது திட்டம் போட்டு திருடுர கூட்டம், பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் சமீபத்தில் வெளியான திட்டம் போட்டு திருடுர கூட்டம் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் கயல் சந்திரன் அடுத்ததாக தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம் பாலா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். டாவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் முனிஷ் காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா, கல்யாணி நடராஜன், பாவா லக்ஷ்மணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 
சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இந்த படத்தை 2 எம்.பி மூவி பஃப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

தீபக் குமார்பதி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஜேகோபின்டெ ஸ்வர்கராஜ்யம் படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கதாநாயகி தேர்வு குறித்து ராம்பாலா கூறியபோது, " இந்தக் கதைக்கு மிக அழகான கதாநாயகி தேவை. அதற்கு ரெபேக்கா மோனிகா ஜான் மிக மிக பொருத்தமாக இருப்பார். தமிழ் ரசிகர்களுக்கு அவரை நிச்சயம் பிடிக்கும்" என்றார்.

 


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
சர்கார் பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு படக்குழு விளக்கம்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதால் பரபரப்பு
ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா பொது மேடையில் தன் காதலை கூறிய காட்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions