தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் ஞானவேல்ராஜா

Bookmark and Share

தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் ஞானவேல்ராஜா

கடந்த சில வருடங்களாக வருடத்துக்கு சுமார் 250 படங்கள் வெளியாகின்றன.  அவற்றில் எத்தனை படங்கள் வெற்றியடைந்தன என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பட எண்ணிக்கை அதிகரித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது.  

வாரத்துக்கு இரண்டு மூன்று நான்கு என ஏகப்பட்ட படங்கள் வெளியாவதால் புதிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. தொடர்ந்து படம் எடுக்கும் முன்னணி தயாரிப்பாளர்களுக்கும் அவர்கள் எதிர்பாரக்கிற தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

அதிக வசூலைத் தரும் தியேட்டரைக் கேட்டால், வசூல் வராத சின்ன தியேட்டர்களை ஒதுக்குகிறார்கள் என்று மல்ட்டிப்ளக்ஸ் மீது குற்றம்சாட்டுகின்றனர் தயாரிப்பாளர்கள்.

கொம்பன் படத்தை வெளியிட்டபோது சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் நிர்வாகத்துக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் பிரச்சனையே ஏற்பட்டது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தியேட்டர்களை லீசுக்கு எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் ஞானவேல்ராஜா.

அதன்பிறகு, வாரத்துக்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்வது என்றும் மிகப்பெரிய திட்டம் வைத்திருக்கிறாராம். தான் தயாரிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் தரமான படங்களையும் தன்னுடைய பேனரில் வெளியிட உள்ளார்.

ஞானவேல்ராஜாவின் இந்த முயற்சி வெற்றியடைந்தால் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும் என்று கருத்து தெரிவிக்கின்றனர் திரைப்பட விநியோகஸ்தர்கள்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions