சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்

Bookmark and Share

சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் பிரியதர்‌ஷனின் கனவுப்படம் ‘மரக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம்’. 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.

பிரிட்டிஷ் காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர். குஞ்சலி மரக்கார் வேடத்தில், மோகன்லால் நடிக்கிறார். அவருடைய இளம் வயது கதாபாத்திரத்தில், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார்.

‘சிறைச்சாலை’ படத்துக்குப் பிறகு 22 வருடங்கள் கழித்து மோகன்லால் பிரபு இருவரும் இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

‘சண்டக் கோழி 2’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் தன்னை அறிமுகப் படுத்தியவர் பிரியதர்‌ஷன் என்பதால், அவர் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என செய்தி வந்தது. ஆனால் அவர் சீன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions