சின்னத்திரைக்கு முழுக்கு போடுகிறார் கீர்த்தி?

Bookmark and Share

சின்னத்திரைக்கு முழுக்கு போடுகிறார் கீர்த்தி?

மானாட மயிலாட புகழ் கீர்த்தியின் காதலுக்கு ஒரு வழியாக கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது. கே.பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனுவும், கீர்த்தியும் காதலிப்பது இண்டஸ்ரிக்கே தெரிந்த விஷயம்தான். ஆனால் காதலுக்கு இரு தரப்பிலிருந்தும் ஆதரவு இல்லாமல் இருந்தது.

பலமுறை திருமண பேச்சு வார்த்தை நடந்து, அது முழுமையடையாமல் போய்விட்டது. இப்போது ஒரு வழியாக இரு குடும்பமும் காதலுக்கு ஓகே சொல்ல வருகிற ஆகஸ்ட் 21ந் தேதி திருமணத்துக்கு நாள் குறித்தாகிவிட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமணஞ்சேரி கோவிலில் திருமணம். வானகரத்தில் திருமண வரவேற்பு நடக்கிறது. தற்போது கீர்த்தி மானாட மயிலாட நிகழ்ச்சியின் 10வது பகுதியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சியின் கின்னஸ் சாதனையிலும் கீர்த்தி பங்கேற்றார். இந்த நிலையில் திருமணம் அறிவிப்பு வந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் 10வது பகுதி முடிந்து விடும் என்றாலும் அடுத்து மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற கேள்வி இப்போதே எழுந்திருக்கிறது.

திருமணத்திற்கு முன்பே கீர்த்தி சின்னத்திரைக்கு முழுக்கு போட்டுவிடுவார் என்றே கூறப்படுகிறது. சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு மீண்டும் வருவார் என்றும் கூறப்படுகிறது. ஜெயம்ரவி சின்னத்திரை நடிகை ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஆர்த்தி சின்னத்திரையில் இருந்து முழுமையாக விலகிக் கொண்டார். அதே போல கீர்த்தியும் விலகி விடுவார் என்று கூறப்படுகிறது. "இப்போதைக்கு அதுபற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.

பெரியவர்கள் எடுக்கும் முடிவுதான் இதில் முக்கியமானது" என்கிறார் கீர்த்தி. பல சினிமா வாய்ப்புகள் வந்தும் கீர்த்தி சினிமா பக்கம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
விஜய்க்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்- புகைப்படம் உள்ளே
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions