அப்பா, அம்மா அனுமதித்தால் சினிமாவில் நடிப்பேன்: சொல்கிறார் கீர்த்தி

Bookmark and Share

அப்பா, அம்மா அனுமதித்தால் சினிமாவில் நடிப்பேன்: சொல்கிறார் கீர்த்தி

மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கீர்த்தி தற்போது நாளைய இயக்குனர் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். கீர்த்திக்கு நிறைய சினிமா வாய்ப்புகளும் வருகிறது. ஆனால் பெற்றவர்கள் சம்மதித்தால் நடிப்பேன் என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  

நாளைய இயக்குனர் நிகழ்ச்சி பெரும்பாலும் ஆண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலும் உற்சாகமாக அதில் பணியாற்றுகிறேன். முன்பு திரைப்படங்களை அதிகம் பார்க்க மாட்டேன்.

தற்போது நிறைய படங்கள் பார்க்கிறேன். இன்றைக்கு திறமையான பல இயக்குனர்களை தந்திருப்பது நாளைய இயக்குனர் நிகழ்ச்சிதான். அந்த வகையில் எனக்கு சந்தோஷம்தான்.

அதில் நிறைய இயக்குனர்கள் என்னை நடிக்கவும் அழைத்தார்கள். ஆனால் எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. ஒருவேளை நல்ல கேரக்டர் அமைந்து அதற்கு எனது அப்பாவும், அம்மாவும் அனுமதித்தால் நடிக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார் கீர்த்தி.

 


Post your comment





Related News
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
விஜய்க்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்- புகைப்படம் உள்ளே
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions