கீர்த்தி விட்ட இடத்தில் காஜல்!

Bookmark and Share

கீர்த்தி விட்ட இடத்தில் காஜல்!

ரஜினிமுருகன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ்க்கு முதல் படமாகும். இப்படம் வெளிவருவதற்குள் இவரிடம் அரை டஜன் படங்கள் உள்ளன. அண்மையில் இவர் நடித்த இது என்ன மாயம் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தற்போது ‘கவலை வேண்டாம்’என்ற படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்கிறார்.  

இவர்கள் இருவரும் இணைந்து போட்டோ ஷுட் எல்லாம் எடுக்கப்பட்டது. இந்த படங்கள் அதிகாரப்பூர்வமாகவும் வெளியிடப்பட்டன. தற்போது  இப்படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை ஜீவாவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கெனவே ஏற்கெனவே நடித்து வந்த படங்களில் அவரது பணி இன்னும் முடிவடையாததால் இப்படத்திற்கு சரியான நேரத்தில் கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

எனவேதான் இப்படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.  இப்படத்தின் மூலம் ஜீவா – காஜல் அகர்வால் ஜோடி சேரும் முதல் படமாகும். இப்படத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெண்களை மையப்படுத்திய படமாக இது உருவாகிறது.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions