நிக்கியை தொடர்ந்து தெலுங்கில் கால் பதிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

Bookmark and Share

நிக்கியை தொடர்ந்து தெலுங்கில் கால் பதிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழ்சினிமாவின் சிறப்பம்சமே அதுதான். மலையாளத்தில் இருந்து இங்கே ஒரு ஹீரோயினை அழைத்து வந்து நடிக்கவைத்தால், அந்தப்படம் ஹிட்டாகும் என்பதும், அடுத்து அவர் தமிழில் தொடர்ந்து நடிக்கிறாரோ இல்லையோ தெலுங்கு திரையுலகம் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் என்பதும் அசின், நயன்தாரா காலத்தில் இருந்துதான் நாம் பார்த்து வருகிறோமே.

அந்த வகையில் நிக்கி கல்ராணி தெலுங்கில் நடிக்க போகிறார் என்கிற செய்தியின் சூடு ஆறுவதற்குள், தமிழில் நடிக்க வந்துள்ள கீர்த்தி சுரேஷுக்கும் தெலுங்கில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

பிரபல நடிகையும் தமிழ், தெலுங்கில் நாற்பது படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்தவருமான விஜய நிர்மலாவின் பேரன்  நவீன் விஜய் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் கீர்த்தி.. நவீன் அறிமுகமாகும் முதல் படமும் இதுதான்.

நவீனின் தந்தை நரேஷும் ஒரு நடிகர் தான். தமிழில் சரளமாக பேசும் கீர்த்திக்கு தெலுங்கு பாஷை பேசுவது கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறதாம். அதனால் தெலுங்கை இம்ப்ரூவ் பண்ணும் முயற்சியை ஆரம்பித்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.


Post your comment





Related News
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions