தனுஷுக்காக ஜீவாவை விட்டு விலகிய கீர்த்தி சுரேஷ்

Bookmark and Share

தனுஷுக்காக ஜீவாவை விட்டு விலகிய கீர்த்தி சுரேஷ்

யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டீகே இயக்கத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் நடிக்க படத்திற்கான ஃபோட்டோ ஷுட் நடைபெற்றது. அதன் பின் படத்திற்கு சரியான முறையில் கால்ஷீட் தாராததால் கீர்த்தி சுரேஷை நீக்கி விட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.

ஆனால், கீர்த்தி சுரேஷ் கால்ஷீட் தராமல் ஏமாற்றியதற்குக் காரணம் தனுஷ்தான் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு. 

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த கீர்த்தி சுரேஷை தன்னுடைய படத்தில் ஜோடியாக்க தனுஷ் அதிக ஆர்வம் காட்டியுள்ளாராம். சிவகார்த்திகேயனின் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அவர் ஜோடி போட்ட நடிகைகள் ஆகியோரை சமீப காலமாக தனுஷ் தேடுவதாக சொல்கிறார்கள்.

பிரபு சாலமன் இயக்கும் படத்தில் யார் நாயகி என்று வந்த போது தனுஷ்தான் கீர்த்தி சுரேஷை சிபாரிசு செய்தாராம். எனவே ஜீவாவுடன் நடிப்பதை விட, தனுஷ் - பிரபு சாலமன் இணையும் கூட்டணியில் நடித்தால் தனக்குப் பெயரும், புகழும் கிடைக்கும் என்று நினைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 

அதனால், ஜீவாவை வேண்டாமென்று சொல்லி அந்தப் படத்திற்காக வைத்திருந்த தேதிகளைத்தான் தனுஷுடன் நடிக்கும் படத்திற்குக் கொடுத்துவிட்டாராம். ஏற்கெனவே, தனுஷ் மீது பயங்கர கடுப்பில் இருக்கும் ஜீவாவுக்கு, இப்போது கீர்த்தி சுரேஷ் விவகாரம் மீண்டும் பயங்கரக் கடுப்பை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள்.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions