மருத்துவமனையில் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

மருத்துவமனையில் கீர்த்தி சுரேஷ்!

காக்கி சட்டை படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வர உள்ள படம் ரஜினிமுருகன். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது.

ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முன்னாள் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். காமெடிக்கு சூரி! திருப்பதி பிரதரஸ் தயாரிக்கும் ரஜினி முருகன் படத்தை உலகம் முழுக்க வெளியிடும் உரிமயை 40 கோடிக்கு வாங்கி உள்ளது ஈராஸ் இண்டர்நேஷ்னல்.

ஈராஸிடமிருந்து தமிழக தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கி உள்ளது. ரஜினி முருகன் படத்தின் வியாபாரம் வெற்றிகரமாக முடிந்துவிட்டாலும் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.

சுமார் 30 சதவிகித காட்சிகளும் பாடல்காட்சிகளும் படமாக்கப்பட வேண்டி உள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில், ரஜினி முருகன் படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கதாநாயகி கீர்த்தி சுரேஷுக்கு கடும் காய்ச்சல். கேரளாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

உடம்பு மிகவும் பலவீனமாகிவிட்டதால் கண்டிப்பாக ஒரு மாதம் ஓய்வு எடுத்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டனர் டாக்டர்கள். எனவே ரஜினி முருகன் படப்பிடிப்பில் அவரால் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions