கீர்த்தி சுரேஷ் வரவு பாதிப்பில் நடிகைகள் !

Bookmark and Share

கீர்த்தி சுரேஷ் வரவு பாதிப்பில் நடிகைகள் !

முதல் படம் வருவதற்கு முன்பே அரை டஜன் படங்களை கயில் வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். காரணம், அவர் எந்த கம்பெனியிடமும் சம்பள விஷயத்தில் பேரம் பேசுவதில்லை. அதேசமயம் ஓவர் கிளாமர் எனக்கு செட்டாகாது.

அதனால் கொஞ்சம் பாத்து சீன் வையுங்கள் என்பதை மட்டும் தனது சார்பில் டைரக்டர்களிடம் வேண்டுகோளாக வைப்பார். ஆனால், இவரது வருகையினால், மார்க்கெட்டில் வளர்ந்து கொண்டிருந்த ஸ்ரீதிவ்யா, லட்சுமிமேனன், கயல் ஆனந்தி என பல நடிகைகள் பின் தங்கினர்.

இதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில ஹீரோக்களின் படங்கள் கீர்த்தி சுரேஷ் பக்கம் வந்ததால் ஸ்ரீதிவ்யா அதிகமாக பாதிக்கப்பட்டார். இந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷ் கால்சீட் சொதப்பல் செய்வதாக கோலிவுட்டில் செய்திகள் பரவின. 

அதோடு சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதுபற்றி கீர்த்தி சுரேஷ் தரப்பில், சில படங்களில் சைன் பண்ணுவதற்கு முன்பே அவர்களாக அவர் நடிப்பதாக செய்தி பரப்பிவிட்டார்களாம்.

அதோடு, ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகியிருப்பதால், அந்த படங்களுக்கு கேட்ட நேரத்தில் அவரால் கால்சீட் கொடுக்க இயலவில்லையாம். மற்றபடி அப்படங்களில் கமிட்டாகி அவரை நீக்கப்படவில்லையாம் என்று கூறுகின்றனர். 

மேலும், தற்போது ரஜினிமுருகன், பாம்புசட்டை, மசாலாப்படம் என சில படங்களை முடித்து விட்டு பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக மணிரத்னம் படம், விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2வில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions