டைரக்டர்களின் நடிகையாகும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

டைரக்டர்களின் நடிகையாகும் கீர்த்தி சுரேஷ்!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர் என சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தவர் கீர்த்தி சுரேஷ்.

அதோடு தெலுங்கிலும் நடித்திருக்கும் இவர், தற்போது ரஜினி முருகன், இது என்ன மாயம், பாம்பு சட்டை என மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் தமிழில் மூன்று படங்களில் நடிப்பதால், தமிழ் சினிமாவில் தனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ரஜினி முருகன் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார்.

காரணம், அவருடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு அந்த படம் ஹிட்டடித்து முன்னணி நடிகையாகியிருப்பதால், அதேபோல், தான் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ரஜினி முருகன் படமும் வெற்றி பெற்று தன்னை தமிழில் ராசியான நடிகையாக்கும் என்று நம்புகிறார்.

மேலும், கோலிவுட்டில் நீண்டகாலம் நிலைக்க வேண்டுமென்றால் மாடர்ன் கேரக்டர்களிலும் அதிகமாக நடிக்க வேண்டும் என்று மற்ற மலையாள நடிகைகளை மாதிரி வெட்டியான கண்டிசன்களை போட்டு டைரக்டர்களை டென்சன் செய்யாமல், நான் டைரக்டர்களின் நடிகை என்று சொல்லிக்கொண்டு, அவர்கள் எப்படி நடிக்க சொன்னாலும் தலையை தலையை ஆட்டுகிறார் கீர்த்தி சுரேஷ்.

இதனால் லட்சுமிமேனன், மியா ஜார்ஜ் போன்ற நடிகைகளெல்லாம் எட்டு கண்டிசன்களை முன்வைத்து படங்களை ஒத்துக்கொள்ளும் நிலையில், எந்த கண்டிசனும் போடாமல் நடிக்க சம்மதிக்கும் கீர்த்தி சுரேஷ், இப்போது சில கமர்சியல் டைரக்டர்களின் பேவரிட் நாயகியாகி வருகிறார்.


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions