முன்னணி இயக்குனரின் படத்தில் கீர்த்தி சுரேஷ்?

Bookmark and Share

முன்னணி இயக்குனரின் படத்தில் கீர்த்தி சுரேஷ்?

பல படங்கள் நடித்தே, வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகள் மத்தியில், தான் நடித்த ஒரு படம்கூட வெளியாகாமல் அடுத்தடுத்து முன்னணி நாயகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வரும் ஒரே நடிகை யாரென்றால் அது கீர்த்தி சுரேஷ்தான். 

இவர் நடித்த முதல் படமான ‘ரஜினிமுருகன்’ இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பாபி சிம்ஹாவுடன் ‘பாம்பு சட்டை’, விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’ ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து முடித்துள்ளார். இதுதவிர, ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. 

இவ்வாறு படம் வெளியாகும் முன்பே பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு மேலும் ஒரு முன்னணி இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் கீர்த்தி சுரேஷை மணிரத்னம் சந்தித்து புதிய படம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. எனினும், இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை. 

இப்படத்தில் ஏற்கெனவே, ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. அந்த செய்தியை ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார். தற்போது, அந்த இடத்தில் கீர்த்தி சுரேஷ்தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

மணிரத்னம் இயக்கும் அந்த புதிய படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பரில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions