கீர்த்தி சுரேஷ் தமிழ்நாட்டு பெண்தானாம்!

Bookmark and Share

கீர்த்தி சுரேஷ் தமிழ்நாட்டு பெண்தானாம்!

பாம்பு சட்டை, ரஜினி முருகன், இது என்ன மாயம், கவலை வேண்டாம் மற்றும் பிரபுசாலமன் படம் என ஐந்து படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். முதல் படம் வெளியாவதற்கு முன்பே இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருவதற்கு முக்கிய காரணமே இவர் நன்றாக தமிழ் பேசுவதுதான்.

அது மட்டுமின்றி, தமிழில் எழுதப்பட்ட டயலாக் பேப்பரை கையில் கொடுத்தாலும் அதை படித்தபடி உடனே அடுத்த சீனில் நடிக்க தயாராகி விடுகிறாராம். அந்த அளவுக்கு ஸ்பாட்டில் வேகமாக இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.

அதனால் தமிழே தெரியாத நடிகைகளுக்கு தமிழை புரிய வைத்து அவர்கள் மொழியில் டயலாக்கை மாற்றிக்கொடுத்து நடிக்க வைப்பதைவிட இவரிடம் வேலை வாங்குவது எளிதாக இருப்பதாக டைரக்டர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், கீர்த்தி சுரேஷின் சொந்த ஊரோ கேரளா. அப்படியிருக்க அவருக்கு எப்படி தமிழ் இத்தனை நன்றாக தெரிகிறது? என்று கேட்டால், அவரது அம்மா மேனகா கேரளாவில் செட்டிலாகி விட்டபோதும், அவர் தமிழ்நாட்டுக்காரர்தானாம். மேலும், சென்னையிலுள்ள எம்எம்டிஏ காலனியில் மேனகாவுக்கு சொந்த வீடு உள்ளது.

அந்த வீட்டில் இருந்தபடி ஐந்தாம் வகுப்பு வரை சென்னையிலேயே படித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து ப்ளஸ்-2 வரை கேரளாவில் படித்தவர், பின்னர் கல்லூரி படிப்புக்கு மீண்டும் சென்னை வந்து விட்டாராம். அதனால் அவருக்கு தமிழ்தான் சரளமாக வருமாம்.  

மேலும், யாராவது தன்னை மலையாளி என்று சொன்னால், அதை ஏற்க மறுக்கும் கீர்த்தி சுரேஷ், எங்க அப்பா மலையாளி, ஆனால் எங்க அம்மா தமிழ்தான். அதனால் நானும் தமிழ் பெண்தான் என்கிறார். 

 


Post your comment





Related News
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions