தன் படங்களுக்கு சொந்த குரலில் டப்பிங் பேசும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

தன் படங்களுக்கு சொந்த குரலில் டப்பிங் பேசும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளாவார். 

தமிழ் சினிமாவில் அறிமுகமானது ‘ரஜினி முருகன்’ படத்தில்தான். ஆனால், அதன்பிறகு இவர் நடித்த ‘இது என்ன மாயம்’ படம் முதலில் வெளிவந்து எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 

இருப்பினும் அதன்பிறகு வெளிவந்த ‘ரஜினிமுருகன்’ கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ‘தொடரி’ படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 

தற்போது விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படமொன்றிலும் இவர்தான் கதாநாயகி. இப்படி குறுகிய படங்களிலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தான் நடிக்கும் படங்களில் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசி வருகிறாராம்.

தமிழ், மலையாளம்  ஆகிய மொழிகளில் சரளமாக பேசும் திறமைகொண்ட கீர்த்தி சுரேஷ், இரண்டு மொழிகளிலும் இவர் நடிக்கும் படங்களுக்கு இவரே டப்பிங் பேசுகிறாராம். இதனாலேயே தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions