கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் நான் தான் செல்லம்! - கீர்த்தி சுரேஷ்

Bookmark and Share

கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் நான் தான் செல்லம்! - கீர்த்தி சுரேஷ்

குல்பி ஐஸ் போல், ஜில்லென இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உதடுகளை அளவாக விரித்து, பற்களை காட்டி, பளீரென சிரிக்கும்போது, நம் இதய துடிப்பு அநியாயத்துக்கு எகிறி, டிரம்ஸ் வாசிக்கிறது.

கீர்த்தி நிஜமாகவே அழகு;அவர் பேசும் தமிழ், அவரைவிட அழகு. தமிழ் கூறும் திரைப்பட நல் உலகிற்கு கேரளா அளித்துள்ள அடுத்த சீதனம், கீர்த்தி சுரேஷ். அவருடன்ஒரு சந்திப்பு:

இயக்குனர்களிடம், முழு கதையையும் கூறும்படி, கண்டிஷன் போடுவதாக கூறப்படுகிறதே? மலையாளத்தில், மோகன் லாலுடன்,கீதாஞ்சலி படத்தில் நடித்த பின், நிறைய இயக்குனர்கள் கதை சொல்ல வந்தனர்.

நல்ல கதைகளாக தேர்வு செய்து நடி; அவசரப்பட வேண்டாம் என, இயக்குனர் பிரியதர்ஷன் கூறினார். அதனால், கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனர்களிடம் கதையை கேட்கிறேன்; இதில் என்ன தப்பு இருக்கிறது?

தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்க, மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் உதவுவதாக பேசப்படுகிறதே? இயக்குனர் பிரியதர்ஷன், எங்கள் குடும்ப நண்பர். சென்னையில், பேஷன் டிசைனிங் படித்துக் கொண்டிருந்த நான், நடிகையாக காரணம் பிரியதர்ஷன் அங்கிள் தான்.

கீதாஞ்சலிக்கு பின், படித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்கலாமா என நினைத்தபோது, அவர் கூறிய ஆலோசனையின்படி, இது என்ன மாயம் உள்ளிட்ட படங்களில் நடிக்க சம்மதித்தேன். மற்றபடி, படங்களில் நடிக்க, அவர் உதவுதாக கூறுவது சரியல்ல.

சண்டைக்கோழி - 2 படத்தில் நடிக்க, கால்ஷீட் மறுத்தது ஏன்? லிங்குசாமி சார் கேட்கும் முன்பே, தெலுங்கு, மலையாளம், தமிழில், நான்கு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தேன்; அதனால் தான் தயங்கினேன். அவரின் அடுத்தடுத்த படத்தில் கண்டிப்பாக நடிப்பேன்.  

சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம்? சிவகார்த்திகேயன் ஜாலியானவர். படப்பிடிப்பின் போது. சிவாவும், சூரியும் கலாய்க்கிறதை பார்க்கும் யாருக்கும் வயிற்றுவலி வந்துவிடும். டேக் ஓகே ஆகும் வரை,எத்தனை முறை வேண்டுமென்றாலும்இருவரும் சளைக்காமல் நடிப்பர்.

மலையாளம் - தமிழ் திரையுலகம் எதுஉங்களுக்கு பிடித்தது? வம்பு இழுத்து விடுவதற்காகவே கேள்விகேட்கிறீர்கள். எனக்கு மலையாள சினிமாவும், தமிழ் சினிமாவும் இரு கண்கள் போன்றவை;இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது. எங்க அம்மா தமிழ் பொண்ணு; அப்பா மலையாளம். இரு மாநில மக்களுக்கும் நான் செல்லம்.<

முதல் படத்திலேயே மோகன் லாலுடன் நடித்தது பற்றி? மோகன் லால் சாரின் நடிப்பை, யாருடனும் ஒப்பிட முடியாது. கேரளாவே அவரது நடிப்பில் கட்டுண்டு கிடக்கிறது. எந்த கேரக்டரில்நடித்தாலும், அந்த கேரக்டராகவேவாழ்ந்திருப்பார். 

தமிழில், நீங்கள் நடித்த முதல் படம் வெளிவருவதற்குள், பல படங்கள், புக் ஆகி விட்டனவே? இது என்ன மாயம், ரஜினி முருகன் படங்கள் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. பாம்பு சட்டை படத்தில் நடிச்சிட்டிருக்கேன்.மலையாளத்தில் நான் நடித்த படங்களை பார்த்த இயக்குனர்கள், தேடிவந்து வாய்ப்பு கொடுத்துள்ளனர். தெலுங்கிலும் இரு படங்களில் நடிக்கிறேன்.

நடிப்பதற்கு, ஹோம் ஒர்க் செய்கிறீர்களா? நடிப்பிற்கு, ஹோம் ஒர்க் தேவையில்லை; இயக்குனர் கதை சொல்லும் போதே, நம்ம கேரக்டர் புரிந்துவிடும். அதை, எப்படி யதார்த்தமா நடிக்க முடியும்ன்னு மட்டும் நினைத்தால் போதும். அம்மா மேனகா தமிழிலும், மலையாளத்திலும், நிறைய படங்களில் நடிச்சிருக்காங்க.

அம்மாவும், அப்பாவும் என் நடிப்பை பாராட்டியதை பெரிதாக நினைக்கிறேன். கிளாமர் கேரக்டரில் நடித்தால் முன்னணி நடிகையாகிவிடலாமே? கிளாமராக நடித்தால் தான் சினிமாவில் நிற்க முடியும் என, சொல்வது சரியல்ல.

படத்திற்கு கதை தான் ஹீரோ; மற்றதெல்லாம் அப்புறம் தான். கதை நல்லா இருந்தால் தான், எந்த கேரக்டரும் பேசப்படும்.கிளாமரை நம்புவதை விட, நல்ல கதைகளைதேடிப் பிடித்து நடிப்பது மேல்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions