தமிழில் கவனம் செலுத்த கீர்த்தி சுரேஷ் முடிவு!

Bookmark and Share

தமிழில் கவனம் செலுத்த கீர்த்தி சுரேஷ் முடிவு!

எண்பதுகளில் தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் மேனகா. ராமாயி வயசுக்கு வந்துட்டா, நெற்றிக்கண் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் இவர்.

தற்போது இவரது மகள் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகிவிட்டார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழில் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் இயக்கத்தில், ராதிகா தயாரிப்பில், விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், பாபி சிம்ஹாவுடன் பாம்புச்சட்டை என நம்பிக்கை தரக்கூடிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இதில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான வித்தியாசமான கேரக்டர் அமைந்திருக்கிறதாம் அவருக்கு. சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பொன்ராம் இயக்கும் ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ், பக்காவான கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறாராம்.

அதேநேரம் ஏ.எல்.விஜய் இயக்கும் இது என்ன மாயம் படத்திலோ மாடர்ன் கேர்ளாக முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறாராம். அதேபோல், 'பாம்புசட்டை' யிலும் வித்தியாசமான வேடம்தானாம்.  

கீர்த்தி சுரேஷின் பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ் சரளமாகப் பேசுகிறார். அவரது அம்மா தமிழ்ப் படங்களில் நடித்தவர் என்பதால் மகளிடம் தமிழில் பேசி தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

அதனால் தமிழில் நடிப்பது எளிதாக இருப்பதாகக் கூறுகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழில் பலமாக கால் ஊன்றக்கூடிய அளவுக்கு அறிமுகப் படங்கள் அமைந்திருப்பதால் தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions