அதர்வாவுடன் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை!

Bookmark and Share

அதர்வாவுடன் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை!

அதர்வா நடிப்பில் சண்டிவீரன், ஈட்டி, கணிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இதில் சண்டிவீரன் விரைவில் திரைக்கு வருகிறது.

மற்ற படங்கள் இரண்டும் இந்த சண்டிவீரனுக்கு முன்பே அவர் கமிட்டாகி நடித்து முடித்த படங்கள் சரியானபடி வியாபாரம ஆகாமல் உள்ளன. அதனால் சண்டிவீரன் படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றால் அந்த படங்கள் எதிர்பார்த்தபடி வியாபாரமாகி விடும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், அடுத்தபடியாக தான் நடிக்க வேண்டிய படங்களுக்கான கதைகளையும் தற்போது கேட்டு வருகிறார் அதர்வா. அதில், வானவராயன் வல்லவராயன் படத்தை இயக்கிய ராஜமோகன் இயக்கும் புதிய படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார் அதர்வா. இந்த படமும் சண்டிவீரனைப்போன்ற கிராமத்து கதையில் உருவாகிறது. அதனால் சில முன்னணி ஹீரோயினிகளிடம் கால்சீட் பேசி வருகிறார்கள்.

அப்படி அதர்வாவுடன் நடிப்பதற்கு கால்சீட் கேட்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் குறிப்பிடத்தக்கவராம். தற்போது பல படங்களை கைப்பற்றி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் அவரது கால்சீட் கிடைத்தால் படத்துக்கு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.

ஒருவேளை அவரது கால்சீட் கிடைக்காதபட்சத்தில் ஒரு வடஇந்திய புதுமுக நடிகை அதர்வாவுக்கு ஜோடியாக நடிப்பாராம். அதற்கான பேச்சுவார்த்தையும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறதாம்.


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
விஜய்க்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்- புகைப்படம் உள்ளே
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
சென்னையில் நிறுவப்படும் முக்கிய பிரபலங்களின் சிலைகள்: கீர்த்தி சுரேஷ் திறந்து வைக்கிறார்
விஜய்யின் ஆந்திர ரசிகர்களுக்கு மே மாதம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions