கிளாமருக்கு நோ சொல்லும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

கிளாமருக்கு நோ சொல்லும் கீர்த்தி சுரேஷ்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரஜினி முருகன், பாபிசிம்ஹாவின் பாம்பு சட்டை உள்பட 3 படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது தமிழில் ஆழக்காலூன்ற களமிறங்கியிருக்கும் அவர், ரஜினி முருகன் படத்தில் கிளாமர் இல்லாத ஹோம்லியான வேடத்தில் நடித்துள்ளார். பாடல் காட்சிகளில்கூட மாடர்ன் கெட்டப்பில் தோன்றியிருக்கும் அவர், துளியும் கிளாமர் காட்டவில்லையாம்.

இந்த நிலையில், பாபி சிம்ஹாவுடன் நடித்து வரும் பாம்பு சட்டை படத்தில் ஆரம்பத்தில் ஹோம்லியான வேடம் என்று சொல்லியே அவரை கமிட் பண்ணியவர்கள், பின்னர் படப்பிடிப்பு நடந்தபோது பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்களாம்.

ஆனால், அதற்கு கீர்த்தி சுரேஷ் உறுதியாக மறுத்து விட்டாராம்.  அதோடு நடிப்புத்திறமை இல்லாதவர்கள்தான் உடம்பைக்காட்டி நடிக்க வேண்டும். ஆனால் நடிக்கத் தெரிந்த நான் அப்படி நடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன் என்றும் தனது மறுப்பை உறுதிபட கூறி விட்டாராம்.

மேலும்,புதிதாக தன்னிடம் கதை சொல்லி வரும் டைரக்டர்களிடமும் கண்டிப்பாக கிளாமராக நடிக்க மாட்டேன் என்று நோ சொல்லி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions