கீர்த்தி சுரேஷை பாராட்டிய ரஜினி பட இயக்குனர்

Bookmark and Share

கீர்த்தி சுரேஷை பாராட்டிய ரஜினி பட இயக்குனர்

தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அவர் பாபி சிம்ஹாவுடன் நடித்திருந்த பாம்பு சட்டை படம் தாமதமாக வெளியானாலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை புகழ்ந்து பேசியுள்ளார்.

இது பற்றி இயக்குநர் ஆடம் தாசன் கூறியிருப்பதாவது ”இரஞ்சித் நேரில் பார்க்க வேண்டும் என்று அழைத்தார். 30 நிமிடங்களுக்கும் மேலாக படத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதிலும் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தைப்பற்றியும், அவரது அப்பாவாக நடித்த சார்லி சார் பற்றியும் சிலாகித்து பேசினார்."

"கீர்த்தி சுரேஷ் பாத்திரப்படைப்பிற்காக உங்களை நூறு முறை பாராட்டுவேன் என்று கட்டிப்பிடித்துக்கொண்டார். எளிய மக்களின் கதைகள் சினிமாவாகி, அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்போது, அது ஒரு படைப்பாளனின் தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல, இந்த சமூகத்தின் மகிழ்ச்சி என்றார் இயக்குனர் பா .ரஞ்சித்.”


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions