கேஷாவுக்கு தமிழ் சினிமா கொடுத்த ஏமாற்றம்!

Bookmark and Share

கேஷாவுக்கு தமிழ் சினிமா கொடுத்த ஏமாற்றம்!

அஜித் நடித்த அசல் படத்தை இயக்கிய சரண் ஐந்து வருடங்கள் கழித்து இயக்கிய படம் செந்தட்டிக் காளை செவத்தை காளை. அந்த படத்தைதான் இப்போது ஆயிரத்தில் இருவர் என்று மாற்றியிருக்கிறார். வினய் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சாமுத்திரிகா, சுவாஸ்திகா, கேஷா காம்பாதி ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

இவர்களில் கேஷா காம்பாதி, கொக்கோகோலா நிறுவனத்தின் மாடல் ஆவார். மும்பை பெண்ணான இவர், தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஒரு நல்ல என்ட்ரி வேண்டுமே என்பதற்காக முன்னணி டைரக்டர்களின் படங்களாக தேடிக்கொண்டிருந்தவர், வினய் மூலமாக ஆயிரத்தில் இருவர் படத்தில் நடித்தார்.

அந்த படத்தில் நடித்து வந்தபோதே, தற்போது அமரன்-2 படத்தை கார்த்திக்கை வைத்து இயக்கும் ராஜேஷ்வர் இதற்கு முன்பு இயக்க இருந்த அடுத்தது நீ என்ற படத்தில் நாயகியாக கமிட்டாகியிருந்தார். ஆனால், அந்த படம் ட்ராப் ஆகி விட்டது.

அதனால் ஆயிரத்தில் இருவர் படத்தைதான் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் கேஷா. ஆனால் இப்போது அப்படமும் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியிருப்பதால், தமிழில் புதிய படங்கள் கிடைக்காமல் ஆந்திராவுக்கே திரும்பிச்சென்று விட்ட கேஷாவிடம், யாராவது தமிழ் சினிமா முயற்சி என்னாச்சு? என்று கேட்டால், தமிழில் நான் கமிட்டான ஒரு படம் ட்ராப்பாகி விட்டது.

இன்னொரு படம் பைனான்ஸ் பிரச்சினையில் இருக்கிறது. அதனால் தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற இன்ட்ரஸ்ட் எனக்கு குறைந்து விட்டது என்கிறாராம் கேஷா காம்பாதி.


Post your comment





Related News
ஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா!
கவர்ச்சி பிகினியில் பிரபல நடிகை, இதெல்லாம் கேவலம் இல்லையாம் - புகைப்படம் உள்ளே.!
அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கும் நிகிஷா பட்டேல்
"அதுக்கு" எதுக்கு திருமணம்... எடக்குமடக்கா பேசும் இளம் நடிகை
ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை இல்லை: நிகிஷா பட்டேல்
தனுஷுடன் நடிக்க ஆசைப்படும் நிகிஷா பட்டேல்!
படப்பிடிப்பில் நடிகைகள் இனியா, நிகிஷா குடுமிபிடி சண்டை
நாரதனுக்காக ஒரே நாளில் 10 கிலோ மீட்டர் ஓடிய நிகிஷா படேல்
ஹீரோ கொடுத்த வாய்ப்பு நிகிஷா இன்ப அதிர்ச்சி
நடிகையின் ஐயிட்டம் சாங் ஆசை நிறைவேறியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions