குஷ்பூவின் பாராட்டு மழையில் நனையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

குஷ்பூவின் பாராட்டு மழையில் நனையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

காக்கா முட்டையில் அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் மனங்கொள்ளாத மகிழ்ச்சியில் இருக்கிறார். பலரும் அவரது நடிப்பைப் பாராட்டினாலும் குஷ்பூ பாராட்டியதை மறக்க முடியவில்லையாம்.

நீளமாகப் பாராட்டிப் பேசியவர் தன்னை ஸ்மிதா பாட்டீலுடன் ஒப்பிட்டுப் பேசியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்கிறார் ஐஸ்வர்யா . இந்த நேரம் ஐஸ்வர்யா நினைவில் அலையடிக்கும் விஷயம் என்ன என்றால், " பலரும் இதுமாதிரி சீரியஸான படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் .நீ வளர்ந்து வரும் கதாநாயகி நடிகை. இப்போது போய் பெரிய பசங்களுக்கு அம்மாவாக நடிப்பதா? உன்முடிவை மாற்றிக் கொள் என்று அறிவுரை கூறினார்கள்.

டைரக்டர் மீது நம்பிக்கை இருந்ததால் நடித்தேன். இருந்தாலும் எனக்குப் பயமாக இருந்தது.படம் நல்ல படம்தான். ஆனால் ஓடவேண்டுமே. அறுபது நாட்கள் சைதாப்பேட்டை, காசிமேடு என்று குப்பம் குடிசைகளில் படப்பிடிப்பு நடந்தது. அழுக்கு மேக்கப்புடன் நடித்தேன். அந்த இரண்டு பசங்களும் நடிக்கவில்லை. இயல்பாக இருந்தார்கள்.

அப்படியே அவர்கள் போக்கில் போகவிட்டுத்தான் டைரக்டர் எடுத்தார்.. நான் காக்கா முட்டை படத்தின் முதல் ஷோ பார்த்தபோது பதற்றத்தில் என்னை நம்பவே முடியவில்லை. ஒன்றுமே புரியவில்லை.மறுமுறை பார்த்தபோது தான் படமே எனக்கு புரிந்தது. அப்போது அவ்வளவு பதற்றமாக இருந்தது.

காக்கா முட்டை பார்த்து பலரும் பாராட்டுகிறார்கள். வசூல் ரீதியாகவும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது பெரியவிஷயம். இன்னும் கூட டிக்கெட் கிடைக்கவில்லை என்கிற விஷயம் கேள்விப்படும் போது நான்அடைகிற சந்தோஷத்தைவிட வேறென்னபெரிதாக இருக்க முடியும்? இப்போது எல்லாரும் பாராட்டும் போது அப்போது மனசு மாறி நடிக்காமல் இருந்திருந்தால் எப்படிப்பட்ட படத்தை இழந்திருப்போம் ?நான் எப்போது முடிவெடுத்தாலும் சரியாகவே இருக்கும் எனத்தோன்றியது.

கடவுளுக்கு நன்றி" என்கிறவர் விருது கிடைக்காதது பற்றிக் கேட்டால். "படத்துக்கு விருது கிடைத்ததில் சந்தோஷம். என்னை இப்படி கேட்பதே விருது கிடைத்தமாதிரிதான் உணர வைக்கிறது.

நான் வளர்ந்து வரும் நடிகை. இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது எனவே அது பற்றி கவலைப்பட நேரமில்லைஎன்கிறார்.

சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல், சுந்தர்.சி. இயக்கும் ஹலோ நான் பேய் பேசறேன் ,குற்றமும் தண்டனையும் ,தீபாவளி துப்பாக்கி, உள்ளிட்ட பல படங்களை கையில் வைத்திருக்கிறார்  ஐஸ்வர்யா ராஜேஷ்.


Post your comment

Related News
ஆபாசமாக பேசிய ரசிகரை தாறுமாறாக வெளுத்து வாங்கிய குஷ்பூ - புகைப்படம் உள்ளே.!
எச்ச ராஜா நீ வா, வந்து பெரியார் சிலையை எடு பார்க்கலாம் - பிரபல நடிகை ஆவேசம்.!
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
குஷ்பூவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - கலங்க வைக்கும் நிகழ்வு.!
சூர்யாவை இழிவு படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்
ஐயோ என் தோசையை காணும், போலீசில் புகார் அளிக்கணுமா? - ட்விட்டரில் பதறிய குஷ்பூ.!
ஆஸ்பத்திரியில் அட்மிட்டான நடிகை குஷ்பூ! ஏற்பாடுகள் தீவிரம்
மெர்சல் படத்தை மிரட்டிய பிரபல கட்சியை கிழித்தெடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
நாய் குட்டியை மாடியில் இருந்து வீசிய சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகைகள்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions