ஜிப்பா ஜிமிக்கி - குஷ்பூ அறிமுகம்

Bookmark and Share

ஜிப்பா ஜிமிக்கி - குஷ்பூ அறிமுகம்

கிரிஷ் திவாகர், குஷ்பு பிரசாத், நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், இளவரசு உள்பட பலரும் நடித்துள்ள ஜிப்பா ஜிமிக்கி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை ப்ரண்ட்ஸ் இண்டர்நேசனல் சார்பில் திவாகர் தயாரிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் ரா.ராஜசேகர்.

இப்படத்தை பற்றி ராஜசேகர் கூறும்போது, திவாகர் கர்நாடகாவில் சில படங்களை தயாரித்துள்ளார்.  இருந்தாலும் தனது மகனை கிரிஷை தமிழில்தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று படமெடுத்துள்ளார். இதில் கிரிஷ்க்கு ஜோடியாக குஷ்பு என்றொரு பெங்காளி நடிகையை அறிமுகம் செய்திருக்கிறோம்.

இவரது நிஜ பெயரே குஷ்புதான் மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கர்நாடகத்தில்தான் படமாக்கப்பட்டுள்ளது. வழக்கமான காதல்தான் என்றாலும் சின்ன வயதிலேயே பெற்றோரால் திருமண ஒப்பந்தம் போடப்பட்ட ஒரு பையனும் -பெண்ணும், எப்படியேனும் பிரிந்து விட வேண்டும் என்பதற்காகவே இணைகிறார்கள்.

ஆனால் பின்னர் அவர்களால் பிரியமுடியாதநிலை ஏற்பட்டு விடுகிறது. இதை சுவராஸ்யமாக  கதை  சொல்லியிருக்கிறோம் என்றார்.  

இப்படத்தின் பட டைட்டில் டைட்டீல் கேட்சிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆண்கள் அணியும் ஜிப்பா, பெண்கள் காதில் அணியும் ஜிமிக்கி இரண்டையும் இணைத்து ஜிப்பா ஜிமிக்கி என்று பெயர் வைத்திருக்கிறேன் என்றார். 


Post your comment





Related News
ஆபாசமாக பேசிய ரசிகரை தாறுமாறாக வெளுத்து வாங்கிய குஷ்பூ - புகைப்படம் உள்ளே.!
எச்ச ராஜா நீ வா, வந்து பெரியார் சிலையை எடு பார்க்கலாம் - பிரபல நடிகை ஆவேசம்.!
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
குஷ்பூவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - கலங்க வைக்கும் நிகழ்வு.!
சூர்யாவை இழிவு படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு கண்டனம்
ஐயோ என் தோசையை காணும், போலீசில் புகார் அளிக்கணுமா? - ட்விட்டரில் பதறிய குஷ்பூ.!
ஆஸ்பத்திரியில் அட்மிட்டான நடிகை குஷ்பூ! ஏற்பாடுகள் தீவிரம்
மெர்சல் படத்தை மிரட்டிய பிரபல கட்சியை கிழித்தெடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
நாய் குட்டியை மாடியில் இருந்து வீசிய சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகைகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions