சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு ரித்தீஷ், குஷ்பு நிதி உதவி

Bookmark and Share

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு ரித்தீஷ், குஷ்பு நிதி உதவி

சமீபத்தில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் புதிய தலைவராக சிவன் ஸ்ரீனிவாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக போஸ் வெங்கட், பொருளாளராக பரத்கல்யாண், துணைத் தலைவர்களாக கமலேஷ், சோனியா தேர்வு பெற்றனர். 

டெல்லி கணேஷ், பரத், சதீஷ், ராஜசேகர் ஆகியோர் துணைசெயலாளர்கள் ஆனார்கள். செயற்குழு உறுப்பினர்களாக 14 பேர் தேர்வு ஆனார்கள். சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது. 

இதில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா, செயலாளர் குஷ்பு, டைரக்டர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் சித்ராலட்சுமணன், பொன்வண்ணன், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தலைவர் அருண்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள், சின்னத்திரை நடிகர், நடிகைககள் கலந்து கொண்டனர். 

விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது சின்னத்திரை நடிகர் சங்க வளர்ச்சிக்காக ஜே.கே.ரித்தீஷ் ரூ.5 லட்சம் வழங்கினார். குஷ்பு ரூ.1 லட்சம் வழங்கினார். நலிவடைந்த கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டன. 

குஷ்பு பேசும் போது, ‘நான் எப்போதும் சின்னத்திரை நடிகர் நடிகைகளும் துணையாக இருப்பேன். இந்த சங்கத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்வேன்’ என்றார். 

கூட்டத்தில் சின்னத்திரை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது, சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவது உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions