குஷ்பு உருவப்படத்தை எரித்து போராட்டம்

Bookmark and Share

குஷ்பு உருவப்படத்தை எரித்து போராட்டம்

குஷ்பூ அடிக்கடி ஏதாவது கருத்து சொல்லி சிக்கலில் மாட்டிக்கொள்வார். இதை அவர் வழக்கமாகவே வைத்துள்ளார். இவர் தாலி குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. தற்போது மீண்டும் அவர் தாலி அணிவது குறித்து பேசியுள்ளார்.

பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் நேற்று முன்தினம் நடந்த மகளிர் கருத்தரங்கில் அகிலஇந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “பெண்களுக்கு சுய மரியாதை வேண்டும் என்று பாடுபட்டவர் பெரியார். பெண்கள் கழுத்தில் தாலி அணியலாமா? அல்லது வேண்டாமா? என்பது அவரவர்களின் விருப்பம். அது அவர்களுடைய சுதந்திரம்” என பேசியுள்ளார்.

அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா சிலை முன் நேற்று போராட்டம் நடத்தினார்கள். அப்போது குஷ்பு உருவப்படத்தை எரித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions