ரணகளத்திற்கு மத்தியிலும் இப்படி ஒரு நட்பு: குஷ்புவின் போட்டோவை பாருங்க

Bookmark and Share

ரணகளத்திற்கு மத்தியிலும் இப்படி ஒரு நட்பு: குஷ்புவின் போட்டோவை பாருங்க

குஷ்பு நடத்தும் நிஜங்கள் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என நடிகை ஸ்ரீப்ரியா குரல் கொடுத்து வரும் நிலையில் அவரின் கணவர் ராஜ்குமாருடன் எடுத்த புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை, குஷ்பு நடத்தும் நிஜங்கள் ஆகிய குடும்ப பஞ்சாயத்து இல்லை கட்டாயப் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீப்ரியா. குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை கட்டப் பஞ்சாயத்து என்று அவரே கூறியுள்ளார்.

நான்கு சுவர்களுக்குள் வைத்து தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை டிஆர்பிக்காக டிவியில் ஊர், உலகமெல்லாம் பார்க்க தீர்க்கிறார்களே என ஸ்ரீப்ரியா வேதனை தெரிவித்துள்ளார்.குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக அவர் ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

குஷ்புவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து வருகிறார் ஸ்ரீப்ரியா. இந்நிலையில் ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் குஷ்புவுடன் இருக்கும் புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். குஷ்புவும், ராஜ்குமாரும் நண்பர்கள் ஆவர்.குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் அது அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதில் ஒருவர் மட்டும் ஸ்ரீப்ரியா எங்கே என கேட்டுள்ளார்.

 


Post your comment





Related News
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு நடிகை குஷ்பு மதுரை ஹைகோர்ட்டில் மனு
டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பார்த்து ஷாக்கான குஷ்பு?
அவர் ஞானி!! கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
கேரளாவில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை: குஷ்பு கடும் தாக்கு
குஷ்புவின் பாஸ்போர்ட் பிரச்சனை- உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்பு
எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ரெடி: குஷ்பு
மும்பை போய்ட்டு வர்றதுக்குள்ள தமிழ்நாடு மாபியா கும்பலிடம் சிக்கிருச்சே.. குஷ்பு
யாரை சொல்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா? குஷ்பூவையா
குஷ்புவின் கேள்விக்கு பதில் அளிக்க திணறிய பீட்டா- போட்டு வாங்கிய நடிகை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions