தம்பிக்கு ஆதரவு திரட்டும் குஷ்பு!

Bookmark and Share

தம்பிக்கு ஆதரவு திரட்டும் குஷ்பு!

2008-ல் குஷ்புவின் தம்பி அப்துல்லா நாயகனாக நடித்த படம் நேற்று போல் இன்று இல்லை. அப்படத்தில் ப்ரியா சகாதேவ் அவருக்கு ஜோடியாக நடிக்க வினிதா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார். அதோடு,  டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் காமெடிக்காக கமிட்டாகியிருந்தனர். ஆனால் கெளசர் இயக்கத்தில் உருவாகயிருந்த அப்படம் சில நாள் படப்பிடிப்போடு நிறுத்தப்பட்டது.

அதையடுத்து தம்பிக்காக சில தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்தார் குஷ்பு. அப்போது, சிலர் வில்லன் வேடம் கொடுக்க முன்வந்தனர். ஆனால், அப்துல்லாவுக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்ததால் நெகட்டிவ் வேடங்களில் நடிக்க அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார் அப்துல்லா.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத அப்படத்தில் இன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கும் சில கமர்சியல் நடிகர்களும் நடிக்கிறார்களாம். இப்படத்தில் அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தில் நாயகியாக நடித்த சாரிகா, அப்துல்லாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும், இந்த தருணத்தை பயன்படுத்தி தம்பி அப்துல்லாவை சினிமாவில் ஆளாக்கி விட வேண்டும் என்று சில அபிமான டைரக்டர்களிடம் அவருக்கு ஆதரவு திரட்டி வருகிறாராம் குஷ்பு.


Post your comment





Related News
நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்
சமூகவலைத்தளத்தில் சண்டையிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை
குஷ்பு வீட்டில் வெடிகுண்டா- போலீசார் தீவிர விசாரணை
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு நடிகை குஷ்பு மதுரை ஹைகோர்ட்டில் மனு
டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பார்த்து ஷாக்கான குஷ்பு?
அவர் ஞானி!! கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
கேரளாவில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை: குஷ்பு கடும் தாக்கு
குஷ்புவின் பாஸ்போர்ட் பிரச்சனை- உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்பு
எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ரெடி: குஷ்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions