சரத்குமாரை எதிர்த்து குஷ்பூவா?

Bookmark and Share

சரத்குமாரை எதிர்த்து குஷ்பூவா?

இந்த ஆண்டு நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் களம் பயங்கரமாக சூடு பிடித்துள்ளது. அக்டோபர் 18-ந்தேதி நடைபெறும் இந்த தேர்தலில் சரத்குமார் அணியும், விஷாலின் பாண்டவர் அணியும் மோதுகின்றன. 

இதில் நாங்கள் பொறுப்பிற்கு வந்தால் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவோம், நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்வோம் என்று விஷால் கூறி வருகிறார். 

அதேபோல், நலிந்த நடிகர்களை காப்பாற்றுவோம் என்று கூறிவரும் சரத்குமார் இந்த முறை நடக்கும் நடிகர் சங்க தேர்தல் எங்கள் அணிக்கு தர்மயுத்தமாகும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், பல நடிகர்களிடம் ஆதரவு கோரி வரும் விஷால் அணியினர், அஜித்திடம் வாக்கு சேகரிக்க செல்லயிருந்தபோது, அவர் ஓட்டு கேட்கும் நோக்கத்துடன் என்னை சந்திக்க வரவேண்டாம் என்று சொன்னது விஷால் அணிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அதேசமயம், விஷால் அணிக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்தது மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

அதோடு, அவர் விஷால் அணியில் போட்டியிடப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “சரத்குமாருடன் சில படங்களில் நடித்திருக்கிறேன். அந்த வகையில் அவர் எனது நண்பர். அதேபோல் விஷாலும் எங்கள் படத்தில் நடித்திருக்கிறார்.

அவர் எனது குடும்பத்தில் ஒருவர் போல் இருக்கிறார். அதனால் சரத்குமார், விஷாலுக்கிடையிலான இந்த நட்பு தொடரும். மேலும், எனக்கு நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்
சமூகவலைத்தளத்தில் சண்டையிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை
குஷ்பு வீட்டில் வெடிகுண்டா- போலீசார் தீவிர விசாரணை
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு நடிகை குஷ்பு மதுரை ஹைகோர்ட்டில் மனு
டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பார்த்து ஷாக்கான குஷ்பு?
அவர் ஞானி!! கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
கேரளாவில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை: குஷ்பு கடும் தாக்கு
குஷ்புவின் பாஸ்போர்ட் பிரச்சனை- உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்பு
எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ரெடி: குஷ்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions