டுவிட்டரில் அவதூறு கேள்வி: நடிகை குஷ்பு பாய்ச்சல்

Bookmark and Share

டுவிட்டரில் அவதூறு கேள்வி: நடிகை குஷ்பு பாய்ச்சல்

நடிகை குஷ்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளராக இருக்கிறார். அரசியலில் ஈடுபட்டதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால் படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்.

தற்போது அரண்மனை இரண்டாம் பாகம் படத்தை தயாரித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். ஆட்சேபகரமான கருத்துக்களை கூறி எதிர்ப்புகள் கண்டனங்கள், கோர்ட்டு வழக்குகளை சந்தித்தார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பு ஏற்ற பின் டுவிட்டரில் கருத்துக்கள் பதிவு செய்வதில் பிசியாக இருக்கிறார். ஏராளமானோர் குஷ்பு டுவிட்டர் கணக்கில் தொடர்பில் உள்ளனர். அவர்கள் குஷ்புவிடம் தினமும் பல்வேறு துறைகள் சம்பந்தமாக கேள்விகள் கேட்டு வருகிறார்கள். அதற்கு குஷ்புவும் பதில் அளித்து வருகிறார்.

தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கும் பதில் கூறுகிறார். ஒருவர் குஷ்புவின் அரசியல் பணிகளை அவதூறு செய்வது போல் ஒரு கேள்வி கேட்டு இருந்தார். அதாவது நீங்கள் அரசியலில் இருக்க விரும்புவது பணத்துக்கா, புகழுக்கா அல்லது தாக்கு பிடிப்பதற்காகவா என்று அந்த கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இது குஷ்புவை ஆத்திரப்பட வைத்தது.

அதற்கு அவர் ‘‘நான் 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். சொகுசாக வாழ்வதற்கு தேவையான பணத்தையும், புகழையும் போதிய அளவுக்கு சினிமாவில் சம்பாதித்து விட்டேன் என்று ஆவேசமாக பதில் அளித்து உள்ளார்.

 


Post your comment





Related News
நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்
சமூகவலைத்தளத்தில் சண்டையிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை
குஷ்பு வீட்டில் வெடிகுண்டா- போலீசார் தீவிர விசாரணை
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு நடிகை குஷ்பு மதுரை ஹைகோர்ட்டில் மனு
டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பார்த்து ஷாக்கான குஷ்பு?
அவர் ஞானி!! கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
கேரளாவில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை: குஷ்பு கடும் தாக்கு
குஷ்புவின் பாஸ்போர்ட் பிரச்சனை- உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்பு
எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ரெடி: குஷ்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions