நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு யாருக்கு?: குஷ்பு பதில்

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு யாருக்கு?: குஷ்பு  பதில்

தமிழ் திரையுலகை கலக்கிய நடிகை குஷ்பு இப்போது அரசியலிலும் முக்கிய இடம் பிடித்துள்ளார். இவர் டுவிட்டரில் ரசிகர்கள், அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்...

நான் பலமுறை பார்த்த படம் மவுன ராகம்.

ரஜினிதான் எப்போதும் சூப்பர் ஸ்டார். அவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.சுந்தர் சி, விஜய் கூட்டணி வருமா என்று கேட்கிறீர்கள். விரைவில் வரும் என்று நம்புவோம். அஜித் எனக்கு ஜார்ஜ் குளுனியை நினைவூட்டுகிறார்.

இன்றைய நடிகர்களில் எனக்கு பிடித்தவர் விஷால். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ் ஆகியோரை பிடிக்கும் என்று குஷ்பு பதில் அளித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் உங்க்ள ஆதரவு யாருக்கு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘எப்பொழுதும் சரியானதையும், உண்மையானதையும் ஆதரிப்பேன்’ என்று பதில் அளித்திருக்கிறார்.

அரசியலுக்கு நீங்கள் வந்ததிற்கு காரணம் புகழ் பெறவா? பணம் சம்பாதிக்கவா? என்று ஒருவர் குறும்பாக கேள்வி கேட்க, கோபப்பட்டுள்ள குஷ்பு, ‘25 ஆண்டுகள் சினிமாவில் நடித்து, வசதியாக வாழும் அளவுக்கு பணம் சேர்த்து இருக்கிறேன். இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
எம்.எல்.ஏ.க்களை சிறைவைப்பதா?: குஷ்பு கண்டனம்
அவனை தூக்கில் போடுங்க? குஷ்பு ஆவேசம்
நான் தான் அப்பவே சொன்னனே- விவேகம் குறித்து குஷ்பு பெருமிதம்
குஷ்புவால், விஷாலுக்கு ஏற்பட்ட பிரச்சனை
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை, தீ வைப்புக்கு போலீசே காரணம்: குஷ்பு குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே- குஷ்பு பொளேர்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
நடிகை குஷ்புவுக்கு காலில் காயமடைந்தது!
நான் எப்போது அதிமுகவில் இருந்தேன் முட்டாள்னு நிரூபிக்கிறீங்க - குஷ்பு டுவிட்
80களின் நட்சத்திர சந்திப்பு 6வது ஆண்டாக..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions