மே 9யில் கிக் 2 ஆடியோ ரிலீஸ்

Bookmark and Share

மே 9யில் கிக் 2 ஆடியோ ரிலீஸ்

மாஸ் மகாராஜின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் கிக் 2 ஆகும். அந்த படத்தை பற்றி வெளிவரும் அனைத்து செய்திகளையும் மிகவும் ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் ரவி தேஜாவின் ரசிகர்கள் படித்து வருவது நினைவிருக்கலாம்.

தற்போது மாஸ் மகாராஜ் ரவி தேஜாவின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கிக் 2 படத்தின் ஆடியோ ரிலீஸ் இந்த மாதம் 9ம் தேதி ரிலீசாகிறது என்று செய்தி வெளிவந்துள்ளது.

இந்த செய்தியை வெளியிட்டதே அந்த படத்தின் இசை அமைப்பாளரான தமன் தான் என்பது கூடுதல் சிறப்பாகும். ஆனால் எங்கு, எப்போது என்பது பற்றி தமன் தெளிவாக கூறவில்லை.

அந்த தகவல்கள் படத்தின் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கும் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடி அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் ஆகும். பிரபல ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா காமராவுக்கு பின்னால் இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தை ரேஸ் குர்ரம் பட புகழ் சுரேந்தர் ரெட்டி இயக்குவதால் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரபல என் டி ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக நந்தமூரி கல்யாண் ராம் தயாரிக்கிறார்.

பலுபு மற்றும் பவர் என அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்திருக்கும் மாஸ் மகாராஜ் ஹாட் டிரிக் அடிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions