கிக் 2 படத்தின் தாமத்திற்கு காரணம் என்ன?

Bookmark and Share

கிக் 2 படத்தின் தாமத்திற்கு காரணம் என்ன?

மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற கிக் படத்தின் இரண்டாம் பாகமாக கிக் 2 டோலிவுட்டில் படம் உருவாகியுள்ளது. இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் தள்ளிச் சென்ற இப்படத்தின் வெளியீடு ஜூன் 17 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது.

எதிர்பார்த்தபடி அன்றும் திரைக்கு வராத கிக் 2 படத்தின் வெளியீடு ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் நிறைவடையாததால் இப்படம் ஆகஸ்ட் மாதத்தில் தான் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.

ஆனால் ஜூலையில் இந்திய ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ள பாகுபலி படம் திரைக்கு வருகின்றது. அதனால் கிக் 2 படத்தின் வெளியீடு ஆகஸ்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் நடிகர் கல்யாண் ராம் தயாரித்துள்ள கிக் 2 படத்தை இயக்குநர் சுரேந்தர்ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். கிக் 2 படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ரவி தேஜா அப்படத்திற்கு பின்னர் பெங்கால் டைகர் படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions