கிக்-2க்கு புது பிரச்னை!

Bookmark and Share

கிக்-2க்கு புது பிரச்னை!

பலுபு  மற்றும் பவர் என அடுத்தடுத்த படங்களில் முத்திரை பதித்த மாஸ் மகாராஜ் ரவி தேஜாவின் அடுத்த படத்திற்கு புது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது கிக் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அந்த படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இருக்கின்றது. ஆனால் தற்போது அதில் ஒரு சிக்கல். அந்த படம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடும் என்று தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம்  150 நிமிடங்களுக்கு மேல் ஓடினால், மக்கள் பொறுமையாக இருந்து பார்ப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூறவேண்டும்.

முன்பெல்லாம்  ஒரு திரைப்படம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடும். அதையும் மக்கள் பொறுமையாக தியேட்டரில் அமர்ந்து பார்த்தார்கள். ஆனால் இன்றைய மக்கள் அவ்வளவு பெரிய படத்தை பார்க்க தயாராக இல்லை.

இன்றைய மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்த இயக்குனர்கள் 150 நிமிடங்களுக்கு அதிகமாக ஓடும் படங்களை எடுப்பது இல்லை. இந்நிலையில் கிக்-2 படத்தின் நீளத்தை குறைக்கலாம் என்று நினைத்த போது அதற்கு படத்தின் இயக்குனரான சுரேந்தர் ரெட்டி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

அப்படி குறைத்தால் படத்தின் முக்கியத்துவம் குறைந்து விடும் என்று கறாராக தெரிவித்து விட்டாராம். இந்நிலையில் இந்த படத்தின் நீளத்தை எப்படி குறைக்கலாம் என்று விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

பிரபல தயாரிப்பாளரான கல்யாண் ராம் தயாரிக்கும் இந்த படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக அழகு தேவதை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.இந்த படம் வரும் மே மாதம் ரிலீசாக உள்ளது.


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions