ஜூலைக்கு தள்ளிப் போன கிக் 2 வெளியீடு?

Bookmark and Share

ஜூலைக்கு தள்ளிப் போன கிக் 2 வெளியீடு?

தெலுங்கு  உலகின் மாஸ் மகாராஜா என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் நடிகர்  ரவிதேஜா நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற கிக் படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வந்தது.  கிக் 2 படம் கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால்  இப்படத்தின் வெளியீடு ஜூன் மாதத்திற்கு தள்ளிச் சென்றது.  

ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது இப்படத்தின் வெளியீடு ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததே இதற்கு காரணமாக இருக்கலாம் என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில்  நடிகர் கல்யாண் ராம் தயாரித்துள்ள கிக் 2 படத்தை இயக்குநர் சுரேந்தர்ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்துள்ளார். 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளும், பாடல்களும் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வாறு படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Post your comment





Related News
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
தமிழில் ரீமேக் ஆகும் ரவிதேஜா படம்!
ஹிந்தியில் கிக் 2 படத்தை ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்
ரேஷ்மியை பின்தள்ளிய தேஜஸ்வி!
ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?
ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்
ஆகஸ்ட் 22ல் திரைக்கு வரும் கிக் 2
காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி
ராம் சரணின் அடுத்த படம்
கிக் 2 : சல்மான் கான் அந்தர் பல்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions