ஆகஸ்ட் 22ல் திரைக்கு வரும் கிக் 2

Bookmark and Share

ஆகஸ்ட் 22ல் திரைக்கு வரும் கிக் 2

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள, கிக் 2 படத்தின் திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் நடிகர் கல்யாண் ராம் தயாரித்துள்ள கிக் 2 படத்தை இயக்குநர் சுரேந்தர்ரெட்டி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் பிரம்மானந்தம், ரவி கிஷான், ராஜ்பால் யாதவ், சஞ்சய் மிஸ்ரா , நடிகை கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.   டோலிவுட்டில் வசூல் சாதனை படைத்த கிக் படம் தமிழ் ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

கிக் படத்தின் இரண்டாம் பாகமாக கிக் 2 படம் உருவாகியுள்ளது. மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட கிக் 2 படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படும் என கூறப்படுகின்றது.  

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.  கிக் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்த சல்மான் கான் கிக் 2 படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions