கிடாரி சென்சார் முடிந்தது – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

கிடாரி சென்சார் முடிந்தது – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெற்றிவேல் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் கிடாரி படத்தை வசந்தபாலனின் உதவியாளர் பிரசாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் இதைதொடர்ந்து படம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிவேல் நாயகி நிகிலா இதிலும் சசிகுமார் ஜோடியாக நடித்துள்ளார். ராஜதந்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தர்புகா சிவா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும் எஸ்.ஆர்.கதிர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions