கிடாரியில் கலக்கிய விஜய் 60 காஸ்டியூம் டிசைனர்!

Bookmark and Share

கிடாரியில் கலக்கிய விஜய் 60 காஸ்டியூம் டிசைனர்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 காஸ்டியூம் டிசைனர் யாரென்றால் அது சத்யா தான்.

விஜய் 60, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற என இவரது கைவசம் தற்போது பல பெரிய படங்கள் உள்ளன. குறிப்பாக தெறி படத்தின் மூலம் இவர் ‘இளையதளபதி’ விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனராக பெயர் பெற்றுள்ளார்.

ஒருபக்கம் நடிகராகவும் இவர் அவ்வப்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் சசிக்குமாரின் வெற்றிவேல் படத்தை தொடர்ந்து நேற்று வெளியாகியிருக்கும் கிடாரி படத்திலும் இவர் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

ஒரு சீன்தான் என்றாலும் இவர் வரும் காட்சிக்கு தியேட்டரில் பலத்த கரகோஷம் கிளம்புகிறது. இதைதொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் நடிப்பிலும் மற்றபடி காஸ்டியூம் டிசைனிங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். வாழ்த்துக்கள் ப்ரோ!

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions