ஜூலை 12ல் கில்லிங் வீரப்பன் டிரைலர்

Bookmark and Share

ஜூலை 12ல் கில்லிங் வீரப்பன் டிரைலர்

சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் கில்லிங் வீரப்பன் என்ற படத்தை இயக்கி வருகின்றார். கன்னட நடிகர் சிவராஜ் குமார் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார்.

டில்லியைச் சேர்ந்த நாடக நடிகர் சந்தீப் வீரப்பனாக நடிக்கின்றார். கன்னட நடிகைகள் பருல் யாதவ் மற்றும் யக்னா ஷெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கன்னட மற்றும் தெலுங்கில் தயாராகும் இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்ட கில்லிங் வீரப்பன் படத்தின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.


Post your comment





Related News
இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் வீரப்பன் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
3 மொழிகளில் வெளியாகும் ‘கில்லிங் வீரப்பன்’
வீரப்பனின் மனைவியான யாக்னா ஷெட்டி
வரவேற்பைப் பெற்றுள்ள கில்லிங் வீரப்பன்
வனயுத்தம்’ பட விவகாரம்: முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க நீதி மன்றம் உத்தரவு!
'வனயுத்தம்' படத்தை பார்த்த‌ முத்துலட்சுமி ஆட்சேப காட்சிகளை நீக்க வலியுறுத்தல்!
வீரப்பன் பற்றி தயாரான படங்களை வெளியிட தடை!
இலங்கைப் பிரச்சினை குறித்து டி ராஜேந்தர் அறிக்கை
வனயுத்தம் படத்தை தடை செய்ய வீரப்பன் மனைவி கோரிக்கை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions