வரவேற்பைப் பெற்றுள்ள கில்லிங் வீரப்பன்

Bookmark and Share

வரவேற்பைப் பெற்றுள்ள கில்லிங் வீரப்பன்

சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் கில்லிங் வீரப்பன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும், நடிகருமான சிவராஜ் குமார் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சிவராஜ் குமார் போலிஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கின்றார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

இயக்குநர் ராம் கோபால் வர்மா கில்லிங் வீரப்பன் படத்தின் சில புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட இப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இப்படத்தை தெலுங்கு கன்னடத்தில் மட்டுமல்லாது தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகின்றது.


Post your comment





Related News
இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் வீரப்பன் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
3 மொழிகளில் வெளியாகும் ‘கில்லிங் வீரப்பன்’
ஜூலை 12ல் கில்லிங் வீரப்பன் டிரைலர்
வீரப்பனின் மனைவியான யாக்னா ஷெட்டி
வனயுத்தம்’ பட விவகாரம்: முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க நீதி மன்றம் உத்தரவு!
'வனயுத்தம்' படத்தை பார்த்த‌ முத்துலட்சுமி ஆட்சேப காட்சிகளை நீக்க வலியுறுத்தல்!
வீரப்பன் பற்றி தயாரான படங்களை வெளியிட தடை!
இலங்கைப் பிரச்சினை குறித்து டி ராஜேந்தர் அறிக்கை
வனயுத்தம் படத்தை தடை செய்ய வீரப்பன் மனைவி கோரிக்கை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions