3 மொழிகளில் வெளியாகும் ‘கில்லிங் வீரப்பன்’

Bookmark and Share

3 மொழிகளில் வெளியாகும் ‘கில்லிங் வீரப்பன்’

பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகியுள்ளது. இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் சந்தீப் பரத்வாஜ் என்ற கன்னட நடிகர் நடித்துள்ளார். 

வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இவர் மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். ராஜ்குமாரை வீரப்பன் காட்டுக்குள் கடத்தி சென்று 107 நாட்கள் சிறை வைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் யாக்னா ஷெட்டி நடித்துள்ளார்.

வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக போலீஸ் சூப்பிரண்டு வேடத்தில் ராக்லைன் வெங்கடேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. 

படம் குறித்து ராம்கோபால் வர்மா கூறியதாவது:- “சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை நிகழ்வுகள் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் கொண்டவை. அவனது வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. அந்த தூண்டுதலால் இந்த படத்தை எடுத்துள்ளேன்.

வீரப்பன் தனது கடத்தல் தொழிலுக்காக 900 யானைகளை கொன்றுள்ளான். அவனை பிடிக்க தமிழக, ஆந்திர, கர்நாடக அரசுகள் ரூ.700 கோடி செலவிட்டு உள்ளன. 

அவனை பிடிப்பதற்கான வேட்டை 20 வருடங்கள் நடந்து இருக்கிறது. வீரப்பனை பிடிக்க நடந்த வியூகங்களையும் அவன் சுட்டுக்கொல்லப்பட்டதையும் இந்த படத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன்.

காட்டுப்பகுதிகளில் வீரப்பன் எந்தெந்த இடங்களில் பதுங்கி இருந்தானோ அந்த இடங்களுக்கு நேரில் சென்று படப்பிடிப்பை நடத்தி உள்ளோம்”. இவ்வாறு அவர் பேசினார். 

இந்த படத்தை அடுத்த மாதம் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களிலும் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரை சமரசப்படுத்தி படத்தை வெளியிடும் முயற்சியில் ராம்கோபால் வர்மா ஈடுபட்டுள்ளார்.


Post your comment





Related News
இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் வீரப்பன் படத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ஜூலை 12ல் கில்லிங் வீரப்பன் டிரைலர்
வீரப்பனின் மனைவியான யாக்னா ஷெட்டி
வரவேற்பைப் பெற்றுள்ள கில்லிங் வீரப்பன்
வனயுத்தம்’ பட விவகாரம்: முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க நீதி மன்றம் உத்தரவு!
'வனயுத்தம்' படத்தை பார்த்த‌ முத்துலட்சுமி ஆட்சேப காட்சிகளை நீக்க வலியுறுத்தல்!
வீரப்பன் பற்றி தயாரான படங்களை வெளியிட தடை!
இலங்கைப் பிரச்சினை குறித்து டி ராஜேந்தர் அறிக்கை
வனயுத்தம் படத்தை தடை செய்ய வீரப்பன் மனைவி கோரிக்கை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions