6 ஆயிரம் மேடை நிகழ்ச்சிகள் நடத்திய நடிகர் கிங்காங்!

Bookmark and Share

6 ஆயிரம் மேடை நிகழ்ச்சிகள் நடத்திய நடிகர் கிங்காங்!

ரஜினி நடித்த அதிசயப்பிறவி படத்தில் அறிமுகமானவர் கிங்காங். அந்த படத்தில் ரஜினி சிஷ்யராகவும், கிங்காங் குருவாகவும் நடித்தனர். அதையடுத்து ஏராளமான படங்களில் நடித்துள்ள கிங்காங், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிப்படங்களில் நடித்துள்ளனார். ஷாரூக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்திருந்தார்.

இப்போதும் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோதும், பெஸ்ட் டான்ஸ் என்றொரு கலை நிகழ்ச்சியை தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் வெரைட்டியான நடனம், காமெடி, மிமிக்ரி,மேஜிக் நிகழ்சசிகளை தனது குழு மூலம் நடத்தி வருகிறார் கிங்காங்.

அவரது கலை நிகழ்ச்சிகளில், பாண்டியராஜ், தேவிப்பிரியா, போண்டாமணி, அல்வா வாசு, லொள்ளு சபா மனோகர் என பல காமெடியன்கள் கலந்து கொள்கிறார்களாம். ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் பட்ஜெட்டை பொறுத்து அவர்கள் கேட்கும் நடிகர் நடிகைகளை அழைத்து சென்று இந்த வெரைட்டி ஷோவை நடத்தி வருகிறார்.

இதுவரை 6 ஆயிரம் ஷோக்களை நடத்தியுள்ளார் அவர். இதுபற்றி கிங்காங் கூறுகையில், என்னதான் டிவி மூலம் வீடுகளின் வரவேற்பறைக்கே நடிகர் நடிகைகள் சென்று கொண்டிருந்தபோதும், நாங்கள் வெளியூர்களுக்கு ரசிகர்களை நேரில் சந்தித்து நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளது.

நிகழ்ச்சி தொடங்கி முடிகிற வரைக்கும் எழுந்து செல்லாமல் உட்கார்ந்து ரசிக்கிறார்கள். அதனால்தான் இந்த நிகழ்ச்சியை முன்பை விட இப்போது இன்னும் பெரிய அளவில் நடத்தி வருகிறேன் என்று கூறும் கிங்காங், நான் ஐந்து மொழிகள் மட்டுமின்றி, ஐந்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்தவன். இது எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது என்கிறார். 


Post your comment





Related News
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
உலகளவில் அடித்து நொறுக்கிய வசூல்! விசயம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
சீனாவை திரும்பி பார்க்க வைத்த `தங்கல்' படக்குழுவின் அடுத்த திட்டம்
மேலும் ஒரு பாடலா? பைரவா ரசிகர்களுக்கு போனஸ் விருந்து
பிரபல திரையரங்கில் பைரவா பட புக்கிங் ஆரம்பம்
நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!
அடிமேல் அடியால் சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்
நாளை முதல் ரஜினியின் லிங்கா டிக்கெட் முன்பதிவு
பணத்தை செலவு செய்யாமலே லாபம் சம்பாத்திக்கும் சாமர்த்திய தனுஷ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions