‘கிருமி’ படம் பிரமிப்பாக இருந்தது எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு

Bookmark and Share

‘கிருமி’ படம் பிரமிப்பாக இருந்தது எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு

‘காக்கா முட்டை’  மணிகண்டனின் கதை, திரைக்கதையில் உருவாகியுள்ள கிருமி படத்தில் கதிர், ரேஷ்மி மேனன் நடித்துள்ளனர். அனுசரண் இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த வாரம் வெளியாகிறது.

‘கிருமி’ படவிழாவில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசியதாவது:- ‘கிருமி’ படத்தை எனக்கு திரையிட்டு காட்டினார்கள். பிரமிப்பாக இருந்தது. திரையுலகுக்கு புதிது, புதிதாக நிறைய டைரக்டர்களும், நடிகர்களும் வருகிறார்கள்.

எல்லோரும் மிகவும் திறமைசாலிகளாக இருக்கின்றனர். திரையுலகில் அவர்கள் மிரட்டுகிறார்கள். பெரிய நடிகர்கள், புதுமுகங்கள் என்பதெல்லாம் முக்கியம் இல்லை. 

நல்ல கதையம்சம் உள்ள படங்களாக இருந்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள். என்னைப் பொறுத்தவரை திறமையானவர்கள் பின்னால் ஓடுவேன். அவர்கள் கால்களை தொட்டு கும்பிடவும் தயாராக இருப்பேன். புதியவர்கள் புது புது சிந்தனையுடன் வருகிறார்கள்.

தமிழ் சினிமாவை அவர்கள் எங்கேயோ கொண்டு போய்க் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் என்னைப் போன்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. நான் டைரக்ஷன் வேண்டாம் என்று ஒதுங்கினேன். என்னை கதாநாயகனாக வைத்து பெரிய தயாரிப்பாளர் ஒருவர் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions