மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் கிருமி

Bookmark and Share

மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் கிருமி

அருண் சரண் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘கிருமி’ படத்தில் கதிர் நாயகனானாகவும் இவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 24-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் வெளிவந்த ‘மதயானைக்கூட்டம்’ படத்தில் கதிர் அறிமுகமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

கிருமி படம் வெளியாவதற்கு முன்பே டொராண்டாவில் ரியல் ஏசியன் என்ற பெயரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ‘கிருமி’ பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து வருகிற அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெறும் 17-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் இப்படம் தேர்வாகியுள்ளது. தனது முதல் படத்திலேயே இப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இயக்குனர் அணு சரணுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரிக்க, கே இசையமைத்துள்ளார். அருண் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிருமி படத்திற்கு ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனர் மணிகண்டன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions