உயிருக்கு போராடும் தேசிய விருது கலைஞர்!

Bookmark and Share

உயிருக்கு போராடும் தேசிய விருது கலைஞர்!

ஈரம் படத்தின் மூலம் எடிட்டராக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிஷோர். தொடர்ந்து ஆனந்தபுரத்து வீடு, ஆடுகளம், பயணம், உதயன், 180, காஞ்சனா, ஆரோகணம், பரதேசி,  எங்கேயும் எப்போதும், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

இதில் ஆடுகளம் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். தற்போது, வெற்றிமாறன் இயக்கும், விசாரணை படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை, விசாரணை படத்தில் பணியாற்றி வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் கிஷோர்.

இதனையடுத்து அவரை உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார் இயக்குநர் வெற்றிமாறன். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் மூளைக்கு செல்லும் நரம்பில் அடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆபரேஷன் மூலம் அது சரிசெய்யப்பட்டது. ஆனால் அவர் நினைவு திரும்பவில்லை. இதனிடையே அவரது உடலில் லேசான அசைவுகள் இன்று இருந்ததாம். தொடர்ந்து அவர் ஐ.சி.யூ.,வில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கிஷோரை வைத்து படம் பண்ணிய இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ அல்லது நடிகர்களோ, யாரேனும் மனது வைத்து அவருக்கு இன்னும் உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தால், தேசிய விருது பெற்ற கலைஞரின் உயிரை காப்பாற்றலாம். திரையுலகினர் முன்வருவார்களா...?!


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது?
நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்!
கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்!
கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்
நடிகர் கிஷோரின் கவலை!
காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions