தேசிய விருது பெற்ற இளம் சாதனையாளர் எடிட்டர் கிஷோர் மரணம்.. உறுப்புகள் தானம்!

Bookmark and Share

தேசிய விருது பெற்ற இளம் சாதனையாளர் எடிட்டர் கிஷோர் மரணம்.. உறுப்புகள் தானம்!

கடந்த வாரம் வெள்ளியன்று திடீரென மயங்கி விழுந்து சுயநினைவிழந்த இளம் படத் தொகுப்பாளர் கிஷோர், 6 நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. கிஷோர் இன்றைய பரபரப்பான படத் தொகுப்பாளர்களில் ஒருவர்.

தேசிய விருது பெற்ற இளம் சாதனையாளர் எடிட்டர் கிஷோர் மரணம்.. உறுப்புகள் தானம்! ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, உன் சமையலறையில் படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றியவர் கிஷோர்.

ஆடுகளம் படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றவர் கிஷோர். கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிமாறனின் புதிய படமான விசாரணை-யின் படத்தொகுப்பு வேலைகளில் தீவிரமாக இருந்தார்.

அன்று மாலை படத் தொகுப்பு நடந்த இடத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் யாரென்றோ, அவரது முக்கியத்துவம் என்னவென்றோ கூறாமல் சாதாரணமாக சேர்த்துவிட்டுச் சென்றதால், மருத்துவர்கள் முதலில் சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்பட்டது.

7 மணி நேரங்களுக்குப் பிறகுதான் கிஷோருக்கு எஆர்ஐ செய்து பார்த்தார்களாம். இதில் அவரது மூளையில் ரத்தம் கசிந்ததும், மூளை செயலிழந்துவிட்டதும் தெரிய வந்தது.

இதனால் மேற்கொண்டு சிகிச்சை சாத்தியமில்லை, அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. இருந்தாலும் இந்த ஒரு வாரம் வரை அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து வந்தனர்.

இன்று அவர் மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர். இன்னும் திருமணமாகவில்லை. அடுத்த மாதம்தான் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர் பெற்றோர்.

36 வயதில் அவர் மரணித்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment

Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது?
நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்!
கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்!
கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்
நடிகர் கிஷோரின் கவலை!
காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions