நடிகர் கிஷோரின் கவலை!

Bookmark and Share

நடிகர் கிஷோரின் கவலை!

நடிகர் கிஷோர் பணத்துக்காக நடிப்பவரல்ல மனத்துக்குப் பிடித்தால் மட்டுமே நடிப்பவர். இலக்கியம் படித்தவர், கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர் சினிமாவை ஒரு கலையாக நேசிப்பவர். தமிழ், கன்னடம் என்று மாறிமாறிப் பயணம் செய்கிறார்.

தன்னை பாத்திரப் பொருத்தம் கருதி நல்ல கதையுடன் அழைப்பவர்களுக்கே நடிக்க சம்மதிக்கிறார். ஹரிதாஸ் படத்துக்குப் பிறகு நல்ல அப்பாவாக மாறிவிட்டார். நெகடிவ் ரோல்களை ஏற்க அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

அண்மைக்காலத்தில் திலகர் படம் அவருக்கு நற்பெயரைத் தேடித்தந்தது. இப்போது காதலி காணவில்லை படத்தில் நடிக்கிறார். கிஷோரின் மனைவிக்கு பூர்வீகம் சேலம், தன்னைப்பற்றி தமிழில் வரும் செய்திகளை மனைவியை வைத்து படிக்க வைத்து தெரிந்து கொள்கிறார்.

பழக எளியவரான கிஷோர்,பெங்களூரில் தன் பண்ணையில் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுவார். கிஷோரின் அப்பா அவரை மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தாராம்.

அப்படி இருக்கக் கூடாது என்று தன் மகனை சுதந்திரமாக வளர்த்தால் அவன் வில்லன் வரும்போது விசிலடிக்கிறான். கைதட்டுகிறான் என்ன கொடுமை இது என்று தோன்றுகிறது. காலம் எப்படி மாறிவிட்டது பாருங்கள் என்கிறார் கவலையுடன்.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது?
நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்!
கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்!
கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்
காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்
நடிகையை கடித்த நாய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions