ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்!

Bookmark and Share

ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்!

வாய்ப்புகளை அவசரமில்லாமல் ஒப்புக்கொண்டு, தனக்கென ஒரு கதாபாத்திரத்தில் எப்போதும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் கிஷோர். அவர் இப்போது மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இந்த 2015 அவருக்கு மறக்க முடியாத ஆண்டாக  அமைந்துள்ளது என்றே கூறலாம்.

காரணம், ஒரே ஆண்டில் கமல், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் கிஷோர். தூங்காவனம் படத்தில் கமல், பிரகாஷ்ராஜ், என இரண்டு நடிப்பு சரித்திரம் இருந்தாலும் அவர்களே பாராட்டும்படி கிஷோர் நடித்திருக்கிறார். 

இது குறித்து அவர், “தூங்காவனம் படத்திற்காக நடித்த இரண்டு மாதங்களும் எனக்கு மறக்க முடியாத அனுபவங்களாக இருந்தன. வித்தியாசமான வேடமேற்று நடித்து வரும் யாத்ரீகன் படம் முடிவடையும் நிலையில் உள்ளது.

இதற்காக இந்தியா, நேபாளம் என்று பல இடங்களுக்குப் பயணம் செய்தது நிறைவான அனுபவங்கள் தந்தன. என்னை அடையாளப்படுத்திய வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விசாரணை படம் சர்வதேச பட விழாக்களில் பாராட்டு பெறுவதை இன்னொரு மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். 

கடிகார மனிதர்கள், களத்தூர் கிராமம் என மேலும் 2 தமிழ்ப் படங்களிலும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளேன். இப்பொழுது நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ரஜினியின் கபாலி படப்பிடிப்பைத்தான்” என்கிறார்.

கபாலி படத்தில் கிஷோர் நடிக்கவிருக்கும் பாத்திரத்துக்கு பலரைப்பின்னுக்குத் தள்ளி கிஷோர் பெற்றுள்ளார். ஒரே ஆண்டில் இப்படி ரஜினி, கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிஷோரைத் தவிர யாருக்கும் இவ்வளவு விரைவில் கிடைக்கமுடியாது.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது?
நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்!
கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்!
கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்
நடிகர் கிஷோரின் கவலை!
காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்
நடிகையை கடித்த நாய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions