இயற்கை விவசாயம் செய்கிறார் கிஷோர்

Bookmark and Share

இயற்கை விவசாயம் செய்கிறார் கிஷோர்

திரைப்பட நட்சத்திரங்களில் சிலருக்கு இயற்கை விவசாயத்தின் மீது அதீத ஈடுபாடு உண்டு. அவற்றில் முக்கியமானவர் கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. அவர் கேரளாவில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்.

அதேபோல பிரகாஷ்ராஜ் சென்னை அருகே படப்பையில் பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் இதைச் செய்து வருகிறவர் நடிகர் கிஷோர்.

திரைப்பட நட்சத்திரங்களில் கிஷோர் முக்கியமானவர். கேரக்டர் பிடித்திருந்தால் சம்பளம் பற்றி பேசாமலேயே நடிப்பார். படப்பிடிப்புக்கு ஒரு சோல்னா பை, ஒரு செட் துணியோடு கிளம்பி வருவார்.

கார், செல்போன்களை அதிகம் பயன்படுத்த மாட்டார். பல முறை பெங்களூரிலிருந்து பஸ்சில் வந்திருக்கிறார். பெங்களூர் அருகே உள்ள பன்னேர்கட்டா மலைப்பகுதியில் இவருக்கு பல ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

அங்கு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். 5 வருடங்களுக்கு முன்பு இங்கு விவசாயத்தை ஆரம்பித்தார். மாட்டுச்சாணம், பசுந்தாழ் உயிரிகளின் எச்சம் மட்டுமே உரம். இதுவரை ரசாயன உரம் ஒரு துளிகூட பட்டதில்லை.

கம்பு, தினை, சாமை பயிரிடுகிறார். இதுதவிர 6 ஏக்கரில் பழத்தோட்டம் வைத்திருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இங்கு குடும்பத்துடன் வந்து ஒரு விவசாயியை போலவே உழைத்து வாழ்கிறார். அந்த விதத்தில் வித்தியாசமான நடிகர் கிஷோர். 


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது?
நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்!
கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்!
கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்
நடிகர் கிஷோரின் கவலை!
காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions